Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!!

Free house plot should be given!! Protesting people!!

Free house plot should be given!! Protesting people!!

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!!

கோவில்பட்டி வட்டத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை அன்று போராட்டம் நடந்தது.

இந்த போராட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமை வகித்து நடத்தினார்.

மேலும் பொதுச் செயலாளரான செல்லப்பா, மாவட்ட செயலாளரான பேச்சிமுத்து மற்றும் மாநிலத் துணைப் பொதுச் செயலர் பொன்னுசாமி ஆகியோரும் தலைமை வகித்தனர்.

இப்போராட்டத்தில் கோவில்பட்டி வட்டத்தில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை முறைப்படி விசாரித்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கால தாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் முதலிய கோரிக்கைகளை கூறி அனைவரும் கோஷமிட்டனர்.

இதன் பின்னர் இந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து கோட்டாட்சியர் (பொ) ஜெயாவிடம் அனைவரும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மேலும் இந்த போராட்டத்தில் மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த இளைஞரணி செயலாளரான பால்துரை கலந்து கொண்டார்.

மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளரான முனியசாமி மற்றும் தென் மண்டல மகளிர் அணி செயலர் சுப்புலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா உள்ளிட்ட பலரும் இந்த இலவச வீட்டு மனை பட்டா தொடர்பான போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Exit mobile version