Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!! ரூ.4.5 ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!!

Free scooter for disabled!! Tamilnadu government allocated Rs.4.5!!

Free scooter for disabled!! Tamilnadu government allocated Rs.4.5!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!! ரூ.4.5 ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட்டுத்தும் விதமாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றது.

மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000  வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளின் சட்ட பேரவை கூட்டத் தொடரில் முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து 13 அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.இவை அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகின்றது.

முன்னதாக இரண்டு கால் இழந்து இரண்டு கையும் நன்றாக உள்ளவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு இலவசமாக இருசக்கர வாகனத்தை வழங்கி வந்தது.

தற்பொழுது ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் இனி இவர்களுக்கும் இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக மட்டும் சுமார் ரூ. 4.50  கோடி ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வணிக வளாகங்களில்  மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதிக்கீடு செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்த்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு துறையின் காலி பணியிடங்களின்   கீழ் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்யபடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version