“சக்கபோடு போடு” இனி கணிதம் அறிவியல் பாடவேளைகளிலும் பிடி (PT) பீரியட்!! உதயநிதியின் ஸ்ட்ராங் ரெக்கமென்ட்!
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அமைச்சரவையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் விளையாட்டு துறையானது உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டது.விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் உதயநிதி அவரது பணியில் தீவிரம் காட்டுவதுடன் பல்வேறு அம்சத் திட்டங்களையும் அமல்படுத்தியும் வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பை என்ற போட்டி மாவட்டம் தோறும் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி பரிசுகளை அளித்து வருகிறார்.அதனடிப்படையில் உதயநிதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றபொழுது மாணவர்களுக்காக ஆசிரியர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது எல்லா பள்ளிகளிலும் பிடி(PT) என்ற பாடவேளை வரும் பொழுது அதனை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கிக் கொள்கின்றனர். குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த பாடவேலையை ஆசிரியர்கள் ஒதுக்குவதே கிடையாது.
இவ்வாறு செய்வதால் அவர்களின் விளையாட்டுத் திறன் குறைவதோடு அவர்களுக்கான வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்பொழுது இந்தியாவிற்கு கிடைக்கும் தங்க பதக்கங்களும் சற்று குறைந்த வண்ணமாகவே இருக்கிறது. ஏன் மற்ற ஆசிரியர்கள் இந்த பிடி(PT) பீரியடை மட்டும் வாங்குகிறார்கள். இதற்கு மாறாக அவர்கள் ஏன் அவர்களுடைய பாடவேளையை இதற்கு கொடுக்கக் கூடாது என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனால் இனி வரும் நாட்களில் ஆசிரியர்கள் உடற்கல்வி பாட வேலையை தங்களின் பாடம் நடத்துவதற்காக கடன் வாங்காமல் உங்களுடைய கணக்கு, அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடவேளையை இதற்கு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இவர் அவ்வாறு கூறியதும் அங்குள்ள மாணவர்கள் கருத்த கோஷங்கள் இட்டனர். மேலும் இந்த கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்பு வைப்பதாகவும் தெரிவித்தார்.