இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பதினாலாம் தேதி தொடங்கிய மூன்றாவது போட்டி முதல் நாள் மழை காரணமாக நடைபெறவில்லை இரண்டாம் நாள் தொடங்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முக்கிய வீரர்கள் ஏமாற்றத்துடன் சொற்ப எண்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.
தொடக்க வீரராக களம் இறங்கிய கே எல் ராகுல் தனி ஆளாக அணிக்காக போராடி 139 பந்துகளை சந்தித்து 84 ரன்கள் அடித்தார். பின்பே இவருடன் இணைந்து ஜடேஜா நிதானமான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 123 பந்துகளை சந்தித்து 77 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி பாலோ அணை ஈசியாக தவிர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கடைசி இனி ஜோடியாக களத்தில் இருந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இணை ஃபாலோ ஆனை தவிர்த்தது. அதுவும் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் டீப் சிக்சர் பவுண்டரி என அடுத்து ரன் சேர்த்து ஃபாலோ ஆனை தவிர்த்தார்.
இதனை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் இதனை பெரிதாக கொண்டாடினர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பாலோவனை தவிர்த்து ஒரு அணி கொண்டாடினால் அதனை அவமானமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்து கொண்டாடியது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை ரசிகர்கள் அனைவரும் அவமானத்தை எதற்காக கம்பீர் கொண்டாடுகிறார் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.