கேம் வரை சென்ற கம்பீர் – கோஹ்லி சண்டை! இணையத்தில் வைரலாகும் கேம்!!

0
154
#image_title
கேம் வரை சென்ற கம்பீர் – கோஹ்லி சண்டை! இணையத்தில் வைரலாகும் கேம்.
சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற லக்னோ மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்க்கும் பெங்களூரு அணி வீரர் கோஹ்லிக்கும் ஏற்பட்ட சண்டை மொபைல் கேம் வரை சென்றுள்ளது.
கடந்த மே 1ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முடிவில் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களுக்கும் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லிக்கும் சண்டை ஏற்பட்டது. முன்னதாக போட்டியின் போது பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லி அவர்களுக்கும் லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சண்டை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து ஆர்சிபி வீரர் விராட் கோஹ்லி, லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவருக்கும் 100 சதவீதம் அபராதமும், ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவீன் உல் ஹக் அவர்களுக்கு 50 சதவீதம் அபராதமும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சண்டை மொபைல் கேம் வரை சென்றுள்ளது.
லக்னோ அணி பயிற்சியாளர் கம்பீர் மற்றும் ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி இருவருக்கும் இடையே. நடந்த சண்டையை மையமாக வைத்து புதிய மொபைல் கேம் ஒன்றை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த மொபைல் கேமில் அணியில் இருக்கும் வீரர்கள் ஒருவருக்கொருவர் பேட்டால் தாக்கிக் கொள்வது போலவும் இந்த கேம் வன்முறையை கலந்து  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.