Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“கோலியின் ஷாட்டால் அவரே அப்செட் ஆகி இருப்பார…” முன்னாள் வீரர் சொன்ன கருத்து!

“கோலியின் ஷாட்டால் அவரே அப்செட் ஆகி இருப்பார…” முன்னாள் வீரர் சொன்ன கருத்து!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அவுட் ஆனது குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.

2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தங்களது ஷாட் தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வர்னணையாளருமான கவாஸ்கர் விமர்சித்திருந்தார். அதுபோல இப்போது மற்றொரு முன்னாள் வீரரான கவுதம் கம்பீரும் கோலியின் ஷாட் செலக்‌ஷன் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.

148 ரன்களைத் துரத்திய இந்திய அணி, கேஎல் ராகுலின் ஆரம்ப விக்கெட்டை இந்தியா இழந்தது, ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் மற்றும் விராட் ஜோடி 49 ரன்கள் சேர்த்ததன் மூலம் முதல் ஓவர் அதிர்ச்சியில் இருந்து மீண்டது. ஆனால் இருவருமே நிலைத்து நின்று ஆடவேண்டிய நேரத்தில் தேவையில்லாத ஷாட்களை விளையாடி தங்கள் விக்கெட்களை இழந்தனர்.

இதுபற்றி பேசியுள்ள கம்பீர் “ரோஹித் சர்மாவின் விக்கெட்டுக்குப் பிறகு கோலி மிகவும் ஏமாற்ரம் அடைந்திருப்பார். அதன் பிறகு நீங்கள் அப்படி ஒரு ஷாட்டை ஆடாமல் இருப்பது நல்லது. இதுவே ஒரு இளம் வீரர் அப்படி விளையாடியிருந்தால் நிறைய விமர்சனங்கள் வந்திருக்கும். ஆஃப் ஷாட்.

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது இந்த ஷாட்டை அவர் ஆடியிருக்க தேவையில்லை என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். நீங்கள் 34 பந்துகளில் விளையாடி 35 ரன்கள் எடுத்தீர்கள், உங்கள் கேப்டன் இப்போதுதான் அவுட் ஆனார். உங்கள் இன்னிங்ஸை இன்னும் கொஞ்சம் கட்டியெழுப்பினால், விஷயங்கள் எளிதாகி இருக்கலாம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version