பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்!

0
109
#image_title

பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்!

இந்திய கிரிக்கெட்டில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருந்து வருவது உலகத்திற்கே தெரியும். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட  லக்னோ அணியும், ஆசிபி அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது, அந்தப் போட்டியில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. மைதானத்திற்குள்ளே மோதிக்கொள்ளும் அளவிற்கு இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டனர்.

விராட் கோலி ரசிகர்கள் கம்பீர் செல்லும் இடங்களிலெல்லாம் கோலி, கோலி என்று கத்தி அவரை எரிச்சல் மூட்டுகின்றனர். கம்பீர் சமீபத்தில் கூட விராட் கோலியையும், தோனியையும் மறைமுகமாக சாடி விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கம்பீர் செல்லும்போது, விராட் கோலி ரசிகர்கள் கோலி கோலி என்று கூச்சல்போட்டனர். அப்போது, கம்பீர் ஆள்காட்டி விரலை உயர்த்தி சைகை செய்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டின்சன்கள் கம்பீர் மீது கண்டனங்களை தொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக கம்பீர் விளக்கம் அளிக்கையில், சமூக வலைத்தளத்தில் உலா வரும் வீடியோ உண்மை கிடையாது. நான் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். அதனால் நான் கோபமடைந்ததாக தெரிவித்தார்.

கம்பீர் பேசியதற்கு பின்னர், அந்த வீடியோவை ஆராய்ந்து பார்த்ததில் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் இருந்தது எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ என்று தெரியவந்துள்ளது.

உண்மையில், கோலி என கத்திய வீடியோவில் எந்த எடிட்டிங்கும் செய்யப்படவில்லை. வீடியோ எடுக்கப்பட்ட போது பத்திரிக்கையாளர் ஒருவர் அங்கு இருந்தததாகவும், இந்தக் காட்சியைப் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், கம்பீர், கோலி பெயரை கேட்டு தான் கடுப்பாகி நடுவிரலை காட்டியதுதான் உண்மை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.