Cricket: கம்பீரின் அதிகாரம் குறைக்கப்படுவதாக பிசிசிஐ அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் நியமிக்கப்படும் முன்பே பலவகையான சர்ச்சை விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிசிசிஐ பல்வேறு அதிகாரங்களுடன் இவரை நியமித்தது.
இந்திய அணி நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படு தோல்வியை சந்தித்தது. இதுவரை 12 ஆண்டுகளாக தோல்வி அடையாத இந்திய அணி இவர் தலைமையில் தோல்வியை தழுவியது.
மேலும் இவர் பொறுப்பேற்ற பின்பு தான் இலங்கை அணியுடன் நீண்ட நாட்களுக்கு பின் தோல்வியை சந்தித்தது. இப்போது நியூசிலாந்து அணியுடன் ஒயிட் வாஷ் தோல்வியடைந்துள்ளது.இதற்கு முன் இருந்த தலைமை பயிசியலர்கலான ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் ட்ராவிட் இருவருக்கும் இல்லாத அதிகாரங்களை இவர் கேட்டு பெற்றுக் கொண்டார். அணியின் தேர்வுக் குழுவின் பயிற்சியாளர் கலந்து கொள்ள கூடாது.
ஆனால் அந்த அதிகாரம் கம்பீருக்கு உண்டு அவர் சில தன்னிச்சையான வீரர்களை தேர்வு செய்தார். அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து உடனான போட்டியில் பேட்டிங் வரிசையை மாற்றி களமிறக்கினார்.
அஸ்வின் இதுவரை 10 வதாக களமிறங்கிய தில்லை ஆனால் இந்த போட்டியில் களமிறக்கப்பட்டார். எனவே இவர் தலைமையில் தோல்விகளை மட்டுமே கண்டு வருகிறது இந்திய அணி அதனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை குறைக்க உள்ளது பிசிசிஐ என தகவல்கள் வெளியாகி வருகின்றன.