Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? உண்மையை உடைத்த கங்குலி!

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி சென்றவருடம் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அந்த அளவிற்கு உலக அளவில் அவர் ரசிகர்களை பெற்று இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.
சொல்லப்போனால் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக உலகத்தில் பெயர் வாங்கி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் ஒரு விளையாட்டு வீரர் என்றால் அது மகேந்திரசிங் தோனி தான்.

அதோடு அவர் இந்திய அணியில் விளையாடி கொண்டிருந்த வரையில் ஒரு விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும், தன்னுடைய பணிகளை மிகவும் அற்புதமாக செய்து வந்தார். இவர் ரிவியூ கேட்டால் அது நிச்சயமாக தோற்றுப் போனதாக சரித்திரமே இல்லை.அத்துடன் பேட்டிங் செய்பவருக்கு பின்னால் இவர் நிற்கிறார் என்றால் எல்லைக் கோட்டைத் தாண்டி காலடி எடுத்து வைப்பதற்கு பேட்ஸ்மேன்களின் எண்ணம் எப்போதும் நினைத்தது கிடையாது.அதோடு தோல்வியானாலும் சரி வெற்றி ஆனாலும் சரி எதிலும் தன்னுடைய அமைதியை அவர் கடைபிடித்தார் என்றால் அது மிகையாகாது.

வெற்றியோ, தோல்வியோ எது கிடைத்தாலும் அதனை மனதார ஏற்றுக் கொண்டதுடன் அதோடு சோர்ந்துபோய் இருக்கக்கூடிய வீரர்களை தேற்றுவதிலும் இவர் வல்லவர் என்பதில் மகிழ்ச்சிதான்.கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடி வரும் இவர் ஆட்டத்தில் பல நுணுக்கங்களை கையாள்வார் பல இக்கட்டான சூழ்நிலையில் கூட அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றது.

அந்தவிதத்தில் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணிக்கு ஆலோசகராக மகேந்திர சிங் தோனி செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சமீபத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி கொடுத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது 2013ஆம் வருடம் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடைசியாக சாம்பியன் டிராபி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. அந்த தொடரில் இருந்து தற்போது வரை எட்டு வருட காலமாக இந்த விதமான சர்வதேச ஐசிசி தொடரையும் இந்திய அணி வெற்றி பெறவில்லை என தெரிவித்திருக்கிறார் கங்குகுலி.

இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி ஆலோசகராக செயல்பட்டால் அது அணிக்கு நன்மை பயக்கும் என்று நாங்கள் எண்ணினோம் அதன் காரணமாக தான் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தோனி தலைமையில் இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் மிக அற்புதமாக செயல்பட்டிருப்பது அவருடைய தலைமையில் முதல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றது அதேபோல ஐபிஎல் தொடரில் அவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பிரமாதமாக செயல்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார் கங்குலி.

டி20 போட்டிகளில் அனேக அனுபவங்களை தன்வசம் கொண்டிருக்கும் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட்டால் அது இந்திய அணியின் பலத்தை அதிகப்படுத்தும். இதன் காரணமாக, தான் அவர் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்கள்.

Exit mobile version