Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாகிஸ்தான் அணியுடன் மோதும் இந்திய வீரர்கள்! முக்கிய அட்வைஸ் செய்த கவுதம் கம்பீர்!

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நம்முடைய அணியில் இரு வீரர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் நாட்டில் வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.16 அணிகள் பங்குபெறும் இந்தத் தொடரில் எந்த அணிகள் எந்த எந்த பிரிவில் இடம்பெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி நேற்று முன் தினம் அறிவித்திருக்கிறது.

இதில் ஏ பிரிவில் தற்போதைய சாம்பியனாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இரண்டாவது பிரிவான பி பிரிவில் முன்னாள் சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஒரே பிரிவில் இடம் பிடித்திருக்கின்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சென்ற 2019 ஆம் வருடம் உலக கோப்பை போட்டிக்கு பின்னர் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள். இரண்டு அணிகளும் லீக் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை காண்பதற்கு தற்சமயம் இருந்தே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த சூழலில் இந்த போட்டியை எதிர் கொள்வது தொடர்பாக முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் ஒரு அறிவுரை வழங்கி இருக்கின்றார். அதாவது இந்த போட்டியில் மூத்த வீரர்கள் மட்டுமே முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். இளம் வீரர்களை எந்தவித அழுத்தமும் இல்லாமல் அவர்களை செயல்பட விட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் நம்முடைய அணியில் கோலி, ரோகித் சர்மா, உள்ளிட்டோர் தான் அனுபவம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இரண்டு பேர்தான் அனைத்து விதமான பொறுப்புகளையும் ஏற்று கொள்ள வேண்டும். நான் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட சமயத்தில் நான் மிகவும் பதற்றமாக இருந்தேன் இருந்தாலும் அனுபவ வீரர்கள் மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும், விளையாடினார்கள் என்று தெரிவித்திருக்கிறார் கவுதம் கம்பீர்.

இந்த இரண்டு பிரிவுகளில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி செல்லும் இந்த முறை பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்ற இருப்பதால் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Exit mobile version