Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகக்கோப்பையில் இந்தியா செய்த மோசமான தவறு இதுதான் – பவுலருக்கு கம்பீர் முழு ஆதரவு !

உலகக்கோப்பையில் இந்தியா செய்த மோசமான தவறு இதுதான் – பவுலருக்கு கம்பீர் முழு ஆதரவு !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலானப் போட்டித் தொடர் குறித்து பேசியுள்ள கம்பீர் முகமது ஷமியின் தற்போதைய செயல்பாடு குறித்து பெருமையாகப் பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் அவ்வப்போது கிரிக்கெட் பற்றிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை ஒரு கிரிக்கெட் ரசிகராகவே இப்போதும் காட்டிக் கொள்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்  இன்று தொடங்குவதை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.

அதில் பூம்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் பந்துவீச்சில் உள்ள வேகம் மற்றும் துல்லியம் ஆகியவற்றைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது பேச்சில் ’ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர்ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த வீரர்களான வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோருக்கு எப்படி வீசுவார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களை வீசுவது நல்ல விஷயமாகும்.

ஷமியிடம்  நல்ல வேகம் மற்றும் துல்லியம் உள்ளது. அவரை உலக கோப்பை அரை இறுதியில் நியுசிலாந்துக்கு எதிராக விளையாட விடாமல் செய்ததே மிகப்பெரிய தவறாகும். நல்ல பார்மில் இருந்த அவரை உட்கார வைத்து தான் மிகப்பெரிய சிக்கல். இந்திய மைதானங்களில் ஷமி நன்றாக வீசக்குடியவர் அவர் இப்போது இருக்கும் செயல்திறனால் இந்திய அணிக்கு கவலை இல்லை என்றே நான் கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் கோலி, ஸ்மித் ஒப்பீடு குறித்துப் பேசிய அவர் ‘வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஸ்மித்தை கோலியுடன் ஒப்பிடவே முடியாது. கோலி 11,000 ரன்களை சேர்த்துள்ளார். ஆனால் ஸ்மித்தோ இன்னும் 4000 ரன்களை கூட சேர்க்கவில்லை.’ என கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version