Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லாஸ்லியாவிற்கு டிமிக்கி கொடுத்த கவின்!! தற்போது தோழியுடன் திருமணமா??

Gavin given by Timmy to Laslia!! Are you currently married to your girlfriend??

Gavin given by Timmy to Laslia!! Are you currently married to your girlfriend??

லாஸ்லியாவிற்கு டிமிக்கி கொடுத்த கவின்!! தற்போது தோழியுடன் திருமணமா??

விஜய் டிவியில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ஒரு சீரியல் தான் சரவணன் மீனாட்சி.

இதில் ஹீரோவாக நடித்த கவின் மக்களின் செல்ல பிள்ளையாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது, குறிப்பாக பெண்கள் மனதை தனது சிரிப்பால் கொள்ளை கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது.

எனவே, டாடா மற்றும் லிப்ட் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த நிலையில், இவருக்கு திடீரென திருமணம் நடக்க போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிக் கொண்டு இருக்கிறது.

இவர் முப்பது வருடங்களாக தன்னுடைய தோழியாக இருந்த மோனிகா என்ற பெண்ணை கரம் பிடிக்க உள்ளார். இன்ஸ்டாகிராமில் கவின் புகைபடத்திற்கு கீழ் கமெண்ட் செய்த மோனிகாவிற்கு, என்னுடைய தாய் தந்தைக்கு பிறகு முப்பது வருடங்களாக என்னுடன் இருப்பது நீ மட்டும் தான் என்று பதில் அளித்துள்ளார்.

இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், இவர் முதலில் நடிகை பிரியா பவானி சங்கரை காதலித்தார்.

பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை காதலித்தார். இது எல்லாம் வெறும் நாடகமா என்று கூறி ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸில் கவின், லாஸ்லியா இருவரும் வெறித்தனமாக காதலித்து வந்தது அனைவருக்குமே தெரியும்.

அப்பொழுது இவர்கள் இருவருக்கும் “கவிலியா” என்ற ரசிகர்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. ஆனால் பிக் பாஸில் வெளி வந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.

இப்பொழுது பல வருட காதலியான மோனிகா என்னும் பெண்ணை இவர் திருமணம் செய்ய இருக்கறார். பல வருட காதலி என்றால் எப்படி இடையில் பிரியா பவானி ஷங்கர் மற்றும் லாஸ்லியா இருவரும் வந்தார்கள் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

Exit mobile version