வாத வலிகள் நீங்க!! வாத வீக்கம் குறைய!!இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

0
632

 

வாத வலிகள் நீங்க!! வாத வீக்கம் குறைய!!இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

இது ஒன்னு போதும் வாத நீர், கட்டு கால், முழங்கால் வீக்கம் உடனே சரியாகிவிடும்.

1: நமது உடலில் நீர் சத்து,சர்க்கரை சத்து,மற்றும் உப்பு சத்து குறைவதால் கால் வலி,மூட்டு வலி வருகிறது.வாத நீர் இருந்தாலும் மூட்டு வலி வரும்.

2: தேவையான அளவு நீர் அருந்தி சிறுநீர் நன்கு பிரிந்தால் இந்த நோய் வருவதை தடுக்க முடியும்.

3: வாத நீர் மூட்டுக்களில் உள்ள சவ்வுகளை தாக்கி வலிகளை ஏற்படுத்துகிறது.

4: பெண்களுக்கு மாதவிடாய் முடிந்த பின்னர் கால்சியம் சத்து குறைவதால் முட்டு வலி வருகிறது.

5: ஆண்களுக்கு உடல்பருமன் காரணமாக உடலின் மொத்த எடையும் கால் பகுதி தாங்குவதால் எளிதில் முட்டுவலி வருகிறது.

இதுபோன்ற பிரச்சனைகளை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

சோம்பு (இதில் விட்டமின், பாஸ்பரஸ் இதுபோன்ற நிறைய சத்துக்கள் உள்ளது மற்றும் நம் உடலில் உள்ள வாதநீரை எளிமையாக வெளியேற்றும்).

மிளகு

புதினா தலை ( இது நம் உடலில் உள்ள ரத்தங்களை சுத்தப்படுத்தும்).

செய்முறை:

1: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.

2: பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்க்கவும்.

3: சோம்பு சேர்த்தவுடன் அதில் இரண்டு மிளகு சேர்க்கவும்.

4: பின்பு அதில் மூன்று புதினா தலையை சேர்த்துக் கொள்ளவும்.

5: இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

6: பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

நம் தினமும் குடித்த வந்தால் நம் பாதங்களில் உள்ள வலி எரிச்சல் மூட்டுகளில் உள்ள நீர் கோர்த்தல் இது போன்ற பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

இதனை நாம் 1 மதத்திற்கு குடித்து வந்தால் போதும் நம் உடம்பில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

அதுவே வாரத்திற்கு இரண்டு முறை குடித்தால் போதும். மூட்டு வலி வாத நீர் இது போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம் ஆகும்.