இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் சுப்மன் கில் விளையாட வில்லை. இந்நிலையில் மீண்டும் இந்திய அணியில் களமிறங்க போகும் சுப்மன் கில்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது அதில் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்த போட்டியில் இந்திய 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன் வலைப்பயிற்சியில் காயம் காரணமாக சுப்மன் கில் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை.
இரண்டாவது போட்டிக்கு பயிற்சி மேற் கொள்ளாமல் இருந்தார், ஆனால் தற்போது வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அடுத்து நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் சுப்மன் கில் விளையாடுவதால் கே எல் ராகுல் எந்த வரிசையில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு வேலை அணியில் இருந்தாலும் எந்த வரிசையில் களமிறங்குவார் என்ற கேள்வியும் வருகிறது. அடுத்த 2 வது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கே எல் ராகுல் அல்லது சுப்மன் கில் யார் இறங்க வேண்டும்? கே எல் எந்த வரிசையில் இறங்க வேண்டும்?