பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!!

0
118
Girl's left arm broken during delivery!! Busy in the hospital!!

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொடூர் பகுதியில் வசித்து வருபவர் தான் துரை ஆவார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயஸ்ரீ என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே, ஜெயஸ்ரீ கற்பமாக இருந்ததை அடுத்து இவர் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த ஒன்பதாம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, இவரை அருகில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனைவரும் அழைத்துச் சென்றனர்.

இங்கு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அழகான பெண் குழந்தையை சுகப்பிரசவத்தின் மூலமாக பெற்றெடுத்தார். பின்னர் குழந்தையை வாங்கி பார்த்த தாய் ஜெயஸ்ரீக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, குழந்தையின் இடது கை உடைந்து மற்றும் வலது கை செயல் இழந்து காணப்பட்டது. இதைப்பார்த்த ஜெயஸ்ரீ அதிர்ச்சி அடைந்து, மருத்துவர்களிடம் இதைப்பற்றி பதறி கூறினார்.ஆனால் மருத்துவர்கள் இது குறித்து எதுவும் பதில் அளிக்கவில்லை.

மருத்துவர்களின் இந்த செயலை கண்டித்து ஜெயஸ்ரீ மற்றும் துரையின் உறவினர்கள் மருத்துவமனையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர்.

மேலும், மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொடூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.