ஆதார் அட்டை கொடுங்கள் 1 கிலோ வெங்காயம் ரூ 25 வாங்குங்கள்!! அரசின் அசத்தல் ஆப்பர்!!

0
99
Give Aadhaar card and buy 1 kg onion for Rs 25!! Govt's weird app!!

ஆதார் அட்டை கொடுங்கள் 1 கிலோ வெங்காயம் ரூ 25 வாங்குங்கள்!! அரசின் அசத்தல் ஆப்பர்!!

காய்கறிகளின் விலையானது சமீபத்தில் உச்சத்தை எட்டும் அளவிற்கு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளியின் விலை 100 தாண்டிய உச்ச நிலையில் மக்கள் தக்காளி இன்றி சமைக்க நேரிட்டது. தமிழக அரசோ மலிவு விலைக்கு ஒரு கிலோ தக்காளி என்ற வகையில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி வந்தது.

இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தக்காளியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையானது தற்பொழுது அதிகரித்து வருகிறது. வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்று வந்த நிலையில் தற்போது 80 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

இவ்வாறு உணவு பொருட்களின் விலைவாசியின் ஏற்ற இறக்கத்தால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகின்றனர்.பாமர மக்கள் காய்கறிகளை வாங்கி சமைக்க முடியாத அளவிற்கு நிலைமை வந்துவிட்டது. இதனை தடுக்க தற்பொழுது பஞ்சாப் அரசானது புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அதாவது காய்கறி மணிடியில் ஆதார் அட்டை கொண்டு வந்து காட்டினால் போதும் அவர்களுக்கு மலிவு விலையில் குறைந்த பட்சமாக ரூபாய் 25 க்கு வெங்காயம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் பஞ்சாப் மாநில மக்கள் பெரும்பளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அது மட்டுமின்றி மக்கள் பலர் காய்கறி மண்டிக்கு சென்று ஆதார் அட்டையை காட்டி மேற்கொண்டு வெங்காயத்தை வாங்கியும் செல்கின்றனர். தற்பொழுது இந்த திட்டமானது குறிப்பிட்ட சில மண்டிகளில் நடைமுறையில் உள்ள நிலையில் விரைவில் அனைத்து இடங்களிலும் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

இதேபோல இதர மாநிலங்களில் காய்கறி வெங்காயம் உள்ளிட்டவைகளின் விலை உயரும்போது இதே போல திட்டம் கொண்டு வர அதிகம் வாப்புள்ளதாக கூறுகின்றனர்.இதற்கு எடுத்துக்கட்டாக தக்காளியின் விலை உயர்வின் போது தமிழக அரசானது தே போல ஓர் திட்டத்தை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.