ஈட்டி எறிதலில் தங்கம்!!! உயரம் தாண்டுதலில் வெள்ளி!!! இந்தியா வீரர்கள் சாதனை!!! 

0
160
#image_title
ஈட்டி எறிதலில் தங்கம்!!! உயரம் தாண்டுதலில் வெள்ளி!!! இந்தியா வீரர்கள் சாதனை!!!
நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அன்னு ராணி தங்கமும் உயரம் தாண்டுதலில் இந்தியாவை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் அவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும் வென்று கொடுத்துள்ளனர்.
2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி தொடங்கியது. சீனாவில் ஹாங்சோங் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் மாதம் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஆகியவை சேர்ந்த பல நாடுகள் பங்கேற்று உள்ளது.
10வது நாளான இன்று(அக்டோபர்3) ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அன்னு ராணி அவர்கள் கலந்து கொண்டார். இவர் முதலில் ஈட்டி எறிந்தது ஃபவுலாகியது. இதைத் தொடர்ந்து மீண்டும் விளையாடிய அன்னு ராணி அவர்கள் 62.92 மீட்டர் நீளம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இதே போல இன்று(அக்டோபர்3) நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் அவர்கள் 7666 புள்ளிகள் பெற்று சாதனை படைத்து வெள்ளி பதக்கம் வென்றார். சீன வினர் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். உயரம் தாண்டுதலில் பாரதிந்தேர் சிங் அவர்கள் படைத்த சாதனையை இன்று(அக்டோபர்3) நடைபெற்ற போட்டியில் தேஜஸ்வின் சங்கர் அவர்கள் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.