முருகன் கோவிலுக்கு தங்க சேவல் கொடி காணிக்கை!! எல்லையில்லா பக்தியின் வெளிப்பாடு!!

0
228
Golden rooster flag offering to Murugan temple!! An expression of boundless devotion!!

முருகன் கோவிலுக்கு தங்க சேவல் கொடி காணிக்கை!! எல்லையில்லா பக்தியின் வெளிப்பாடு!!

தமிழகம் முழுவதும் ஏராளமான முருகர் கோவில்கள் இருக்கிறது. அனைத்து கோவில்களிலும் தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

அந்த வகையில் புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரத்தில் உள்ள குன்றத்தூர் முருகன் கோவில் ஆகும். இங்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர்.

மேலும், இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டும் அல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் இந்த கோவிலின் மகிமையை தெரிந்து கொண்டு வந்து செல்கிறார்கள்.

இந்த கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் முருகரிடம் தங்களது தேவைகளை கூறி வேண்டிக்கொண்டு, அது நிறைவேறினால் இதை செய்கிறேன் என்று பல்வேறு வேண்டுதல்களை தினம் தோறும் நிறைவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில், குன்றத்தூரில் வசிக்கும் ஒரு நபர் முருகரிடம் ஒன்றை வேண்டி உள்ளார். அது நடந்தால் தங்கத்தால் செய்யப்பட்ட சேவல் கோடியை காணிக்கை தருவதாக வேண்டி இருக்கிறார்.

அந்த வேண்டுதல் நிறைவேறியதால், தற்போது 65  லட்சத்தில் தங்க சேவை கோடியை முருகனுக்கு காணிக்கையாக அளித்துள்ளார். இந்த தங்க கொடியானது ஒரு கிலோ நானூறு கிராம் எடையில், மூன்று அடி உயரம் கொண்டதாகப் உள்ளது.

இந்த கொடியை முருகன் கோவிலின் அறங்காவலர் குழு தலைவரான செந்தாமரைக்கண்ணன் வாங்கிக் கொண்டார். இவ்வாறு பக்தர் காணிக்கையாக வழங்கப்பட்ட இந்த தங்க சேவல் கொடியை தினமும் முருகப் பெருமானின் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.