விவசாயிகளுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!! காவிரி நீர்திறப்பு உயர்வு!!
தமிழகத்தில் இந்த ஆண்டு சொல்லும்படி அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணையை நம்பி இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
12 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்பட்டிருந்த நிலைமாறி தற்போது பத்தாயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் பற்றாக்குறைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீர்தான் தீர்வு ஆகும்.
இதனையடுத்து நீர்வரத்து மேலும், ஐந்தாயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்திற்கு நீர் திறந்து வைக்கக்கோரி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று அங்கு இருக்கும் ஜல்சக்தி துறை அமைச்சரிடம் நீர் திறந்து வைப்பது தொடர்பாக மனு அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தற்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ் மற்றும் கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரானது 12 ஆயிரத்து ஐநூறு கன அடியாக உயர்ந்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூரு, குடகு, சிக்மகளூரு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
கபினி அணைக்கு இருபதாயிரம் கன அடியாக நீர்வரத்து பெருகி உள்ளது. மேலும், கடந்த இரண்டு நாட்களாகவே மழை கொட்டி தீர்ப்பதன் காரணமாக கே.ஆர்.எஸ் அணையில் நீர்மட்ட அளவானது இரண்டு அடி அதிகரித்து உள்ளது.
இன்று மேட்டூர் அணையில், வினாடிக்கு 165 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் டெல்டா பாசனத்திற்காக பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த காவிரி ஆரின் நீர்வரத்து அதிகரிப்பதால் கூடிய விரைவில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் உயரும் என்று எதிரப்பர்ர்க்கப்டுகிறது. இனிமேல் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் எண்ணப்படுகிறது.
மேலும், குருவை சாகுபடியில் எந்த பிரச்சனையும் இல்லமால் விவசாயம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.மேலும், ஆடி பதினெட்டு அன்று மேட்டூர் அணையில் இந்த நீர்வரத்தைக் காண மக்கள் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.