Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆஸியை தொடர்ந்து நியூசிலாந்து- கதறவிடும் வங்கதேசம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடரை வென்றது போல் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான டி20 தொடரையும் வங்கதேச அணி வென்றுள்ளது.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது நியூசிலாந்து
அணி. முதல் 3 ஆட்டங்களின் முடிவில் வங்கதேச அணி 2-1 என முன்னிலை வகித்தது. 4-வது டி20
ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு
செய்தது.

பேட்டிங்குக்குக் கடினமான ஆடுகளத்தில் நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 93 ரன்களுக்கு
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வில் யங் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். நசும்
அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 19.1 ஓவர்களில் வெற்றியை ருசித்தது. இதன் மூலம் இந்த டி20 தொடரை அந்த அணி கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரையும் வங்கதேசம் வென்றது. கிரிக்கெட்டின் மிக வலுவான இரு அணிகளை வங்கதேச அணி வீழ்த்தியுள்ளது, உலகக்கோப்பை தொடருக்கு அந்த அணியின் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version