Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செஸ் வீராங்கனை ஏமாற்றிய மாநில அரசு! சமூகவலைதளத்தில் குமுறும் வீராங்கனை!

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரை சார்ந்த செஸ் வீராங்கனை மாலிகா காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத இவர் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில், தன்னுடைய வலைப்பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கின்ற பதில் பஞ்சாப் மாநில அரசு தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பரிசு அறிவித்து எனக்கு அழைப்பு விடுத்த கடிதம் என்னிடம் இருக்கிறது ஆனால் நோய்தொற்று உள்ளிட்டவற்றை காரணம் காட்டி அது ரத்து செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார். அதோடு இதன் பிறகு கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் பகத்சிங்கை சந்தித்தேன். அவர் காதுகேளாதோர் விளையாட்டுக்கு அரசு வேலை கொடுக்கவோ அல்லது பரிசு எதுவும் வழங்க இயலாது அதற்கான கொள்கை அரசிடம் எதுவும் இல்லை என்று கூறினார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததை அவர்களிடம் தெரிவித்தேன் ஆனால் அவர் நான் கூறவில்லை முன்னாள் அமைச்சர் தான் கூறியிருக்கிறார். அரசால் எதுவும் செய்ய இயலாது என்று தெரிவித்துவிட்டார். காங்கிரஸ் அரசில் என்னுடைய ஐந்து ஆண்டுகள் வீணாகிவிட்டது, என்னை அவர்கள் முட்டாள் ஆக்கி விட்டார்கள், காதுகேளாதோர் விளையாட்டை பற்றி அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று குமுறலுடன் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version