Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் EPFOவில் வேலை வாய்ப்பு!! 577 காலியிடங்கள்- மிஸ் பண்ணிடாதீங்க!!

#image_title

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் EPFOவில் வேலை வாய்ப்பு!! 577 காலியிடங்கள்!!

மத்திய தொழிற்துறையின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் உள்ள 577 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது. 

இந்த பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் UPSC இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணி பற்றி விவரங்கள்:

காலிப் பணியிடங்கள்:

Enforcement Officer/Accounts Officer  : 487
Assistant Provident Fund Commissioner : 159

கல்வித் தகுதி: 

ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு நிர்ணயித்துள்ள 8-வது நிலையிலான ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:  

Enforcement Officer/Accounts Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

Assistant Provident Fund Commissioner பதவிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். 

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். 

நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை: 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் 

எழுத்துத் தேர்வுக்கு 75% விழுக்காடு, நேர்காணல் தேர்வுக்கு 25% விழுக்காட்டு 

எழுத்துத் தேர்வு: 

Multiple Choice Questions கொண்ட கேள்களைக் கொண்டதாக  எழுத்துத் தேர்வு இருக்கும்.  ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3ல் 1 பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

ஆங்கில அறிவு, இந்திய சுதந்திர போராட்டம், சமீப நிகழ்வு, இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம்,  கணக்கு பதிவியல் கோட்பாடு, தொழிற்துறை தொடர்புகள் மற்றும் தொழிலாளர் சட்டம், பொதுஅறிவியல், மனக்கணக்கு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். 

தேர்வு நேரம் : 2 மணி நேரம். எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:  

விண்ணப்பிக்கும் முறை:

 www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Exit mobile version