அழகர் கோவிலில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஆடித்தேரோட்டம்!! கோடிகணக்கான மக்கள் சாமி தரிசனம்!!
108 வைணவ கோவில்களிலேயே மிகவும் பிரம்மாண்டமானது அழகர் கோவில். இதில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடித்திருவிழா வண்ணமயமாக அரேங்கேறும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 24 ஆம் தேதி முதல் ஆடித்திருவிழா கோலாகலமாக துவங்கியது.
இந்த விழா நாட்களில் சுவாமி – அம்பாள் அன்னம், சிம்மம் மற்றும் அனுமார் போன்ற ஏராளமான வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதன் ஆடிதேரோட்டம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த தேரோட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரை புகைப்படம் எடுத்து சிறப்பித்து வருகின்றனர். மேலும், மக்கள் அனைவரும் அழகரை தரிசித்து கோவிந்தா கோபாலா என்று சத்தமாக முழக்கமிட்டு வருகின்றனர்.
இதனால் அழகர் மலையின் அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. கோலாகலமாக நடைபெறுகின்ற இந்த தேரோட்டத்தை மக்கள் அனைவரும் கண்டு கழிக்கும் விதமாக அனைத்து இடங்களிலும் பெரிய திரை வைத்து அதில் தேரோட்டம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசலில் தேரை அருகே பார்க்க முடியாத பக்தர்கள் இந்த திரையின் மூலமாக பார்த்து அழகரை தரிசித்து வருகின்றனர். மேலும், இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோவிலை சுற்றியும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு எந்நேரமும் பொதுமக்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் தடுக்க முடியும்.