இந்தியாவின் அபார பந்துவீச்சு!! 150 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி!!
இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சினால் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இன்டீஸ் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று அதாவது ஜூலை 12ம் தேதி டோம்னிகாவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதல் டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இன்டீஸ் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வெஸ்ட் இன்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
வெஸ்ட் இன்டீஸ் அணியில் அதிகபட்சமாக அலிக் அதனசெ 48 ரன்கள் எடுத்தார். கார்லஸ் பிராத்வெயிட் 20 ரன்களை கைப்பற்றினார். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசி ரவி அஷ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு பக்கம் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், தக்கூர், சிராஜ் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 150 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் எடுத்துள்ளது. டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்குள் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸிவால் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். இவருடன் கேப்டன் ரோஹித் சர்மா அவர்களும் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.
முதல் நாள் ஆட்டம் முடிவில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸிவால் 40 ரன்களும் ரோஹித் சர்மா 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்தியா 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.