வாடிக்கையாளர்களுக்கு வெளியான சூப்பரான நியூஸ்!! பிரபல வங்கி வெளியிட்ட அருமையான திட்டம்!!
வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு வங்கியில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக அதிக வட்டியை பெறுவதற்கான வாய்ப்பினை தினமும் ஏற்படுத்தி தருகிறது. இதற்காக இரண்டு பிக்சட் டெபாசிட் திட்டங்களை தற்போது கொண்டு வந்துள்ளது.
அதில் ஒன்று 375 நாட்கள் அம்ரித் மஹோத்சவ் எப்டி ஆகும். மற்றொன்று 444 நாட்கள் அம்ரித் மஹோத்சவ் எப்டி என்ற இரண்டு திட்டங்கள் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி வரை பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் வரும் வருமானத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 7.60 சதவிகிதத்தில் வட்டி தொகை கிடைக்கும் என்று கூறி உள்ளது. மேலும் மஹோத்சவ் எப்டி ஆனது 375 நாட்களுக்கு 7.60 சதவிகித வட்டியை வழங்கி வருகிறது.
இதேப்போல மஹோத்சவ் எப்டி திட்டமானது 444 நாட்களுக்கு ஒரு ஆண்டிற்கு சுமார் 7.65 சதவிகித வட்டியை வழங்கும் என்றும் முன்னணி அரசு வங்கியான ஐடிபிஐ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது வாடிக்கயாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறி உள்ளது.
எனவே, மக்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.