ரொனால்டோவால் கோக்ககோலாவுக்கு வந்த பெரும் சோதனை! ஓர் நாளில் 4 பில்லியன் இழப்பீடு!
அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் பெருமளவு ரசிகர்கள் உள்ளனர்.அந்தவகையில் கிரிக்கெட்,கால்பந்து,கூடைபந்து போன்றவை அடங்கும்.அவற்றில் விளையாட்டு வீரர்களுக்கென்று பெரிய ரசிகர்கள் உள்ளனர்.அந்த விளையாட்டுகளில் கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.நம் இந்தியாவிலும் இவருக்கு பல ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர்.
ஏனென்றால் இவர் பல கோடி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதினால் இவர் பல கோடி ரசிகர் கூட்டத்தை வென்றுள்ளார்.இவர் இவரது விளையாட்டினால் ரசிகர்களை வெல்லுவதுடன்,உதவி கரம் நீட்டுவதன் மூலம் பல ஆயிரம் கணக்கான ரசிகர்களை இன்றளவும் வென்றுள்ளார்.அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தாங்கள் வென்ற கோப்பைகள் தான் அவர்கள் வாகை சூடியதையும்,பெருமையையும் எடுத்துக்கூறும்.அவ்வாறு வெற்றி பெற்ற கோப்பையை அவர்கள் யாருக்காகவும் விட்டு கொடுப்பது இல்லை.
ஆனால் அனைவருக்கும் மாறாக இவர்,அந்த வெற்றி கோப்பையையே ஏலத்தில் விட்டு,வரும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.அதனையடுத்து வெளிநாட்டு குளிர் பானங்கள் பலவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்யக்கூடாது என குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமகதான் இருந்தது.இருப்பினும் தற்போது விநியோகம் செய்து தான் வருகின்றனர்.அந்தவகையில் சாப்ட் ட்ரிங்க்ஸ் மேல் மக்களுக்கு உள்ள மோகமே இதன் காரணம் என்று ஓர் சிலர் கூறியும் வருகின்றனர்.
இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.அந்த சந்திப்பில் அவருக்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.அதில் அவர் குடிப்பதற்காக தண்ணீர் மற்றும் கோக்ககோலா வைக்கப்படிருந்தது.ஆனால் அவர் சாப்ட் ட்ரிங்க்ஸ் குடிக்காமல் அதை ஒதுக்கி விட்டு தண்ணீரை எடுத்து குடித்தார்.
அவ்வாறு அவர் தண்ணீர் எடுத்து குடித்தது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.அவர் கோக்ககோலவை ஒதுக்கியதால் அந்த நிறுவனத்திற்கு பெருமளவு இழப்பை சந்தித்துள்ளது.அந்தவகையில் நம் இந்திய மதிப்பில் ரூ.29,337 கோடி இழப்பீட்டை சந்தித்துள்ளது.அதே அமெரிக்கா டாலரில் 4 பில்லியன் ஆகும்.இந்த விளையாட்டு வீரர் இவ்வாறு செய்ததற்கு சமூக வலைத்தளத்தில் பல பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.