பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தும் கிரீன் மிஷன்!! தமிழக அரசு தொடங்கிய அடுத்த புதிய திட்டம்!!
அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது.
இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இவ்வாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.
இவ்வாறு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற தமிழக அரசு தற்பொழுது கிரீன் மிஷன் என்ற திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஈடுபட்டுத்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இந்த செய்தியை காவல் துறை மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹீ ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் மாதம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மட்டும் 33 சதவீத பகுதியை வனத்துறையாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக www.greentnmission.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் மூலம் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரிக்க அரசு முடிவு செய்துள்ளது.மேலும் விதைகளை ஆன்லைன் வழியாக வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இதன் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்களை இதில் ஈடுபடுத்த வைப்பதே என்று தெரிவித்தார். இதன் மூலம் பள்ளி மாணவர்கள் நேரில் சென்று எத்தன வகையான தாவரங்கள் உள்ளது மற்றும் விதைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றது என்றும் மேலும் மரக்கன்றுகளை எவாறு பராமரிப்பது என்றும் கற்று தரப்பட உள்ளது.
இப்படிதான் பசுமையான எதிர்காலத்தை நோக்கி மாணவர்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் 2.80 கோடி மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் அதனை நடுவதற்கான சரியான இடத்தை தேர்வு செய்து வரப்படுகின்றது என்றார்.