விராட் கோலி கேப்டனாக நீடித்திருந்தால் இந்தியா 100 சதவீதம் உலகக் கோபைக்கு தயாராகி இருக்கும்… முன்னாள் கேப்டன் பேட்டி…
இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோஹ்லி அவர்கள் கேப்டனாக நீடித்திருந்தால் இந்திய அணி நடக்கவிருக்கும் 50 ஓவர் கொண்ட உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் அவர்கள் கூறியுள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி அடுத்தடுத்து பெரிய தொடர்களில் விளையாடவுள்ளது. அதாவது ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும், அதன் பின்னர் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கும் 50 ஓவர் கொண்ட உலகக் கோப்பை தெடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லி அவர்கள் கேப்டனாக இருந்திருந்தால் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை தொடருக்கு 100 சதவீதம் தயாராகும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் அவர்கள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் அவர்கள் “இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசேதனை செய்து வருகின்றது. புதிய வீரர்களை நிலைநிறுத்த அணி நிர்வாகம் அனுமதிக்காததால் தேர்வுக் குழு திணறி வருகின்றது. இதன் காரணமாகத்தான் இந்திய அணி சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தது.
இந்திய அணி உலகக் கோப்பையில் சீனியர் வீரர்களை நம்பித் தான் இருக்கின்றது. கேப்டன்களை மாற்றி மாற்றி அணியை வழி நடத்துவதில் அணிக்கு கை கொடுக்கவில்லை.
விராட் கோஹ்லி அவர்களை இந்திய அணியின் கேப்டனாக நீடிக்க அனுமதி கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி கொடுத்திருந்தால் இந்திய அணி நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு 100 சதவீதம் தயாராகி இருக்கும்” என்று அவர் கூறினார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் அவர்கள் 1996 மற்றும் 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி உள்ளார்.