கல்லூரி மாணவிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறை படுத்தி வருகின்றார், அந்த வகையில் பெண்களுக்கு பல சலுகைகளும் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
முதலியவற்றை செய்து வருகின்ற ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கல்வி மற்றும் சுகாதாரம் தான் ஒன்று நல்ல ஆட்சிக்கு மிக முக்கியம் என்றார்.
இதனால் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல திட்டங்களை செய்து வருகின்ற ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவுத்திட்டம் என்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதுமை பெண் என்கிற திட்டத்தையும் தொடங்க உள்ளார்.
அந்த வகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அமையும் என்று அவர் கூறினார். மேலும் குடும்ப நிலை காரணமாக உயர் கல்வி செல்ல முடியாத ஏராளமான மாணவிகள் உள்ளனர்.இந்த திட்டத்தின் மூலம் மாணவிகளின் வங்கி கணக்கில் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு தகுதி உடையவர்கள் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும்.மேலும் இலவச கட்டாய கல்வி என்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படித்தவர்களும் இந்த திட்டத்தில் இணைய முடியும்.
இவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி உடையவர்கள். மேலும் தகுதி உடைய மாணவிகள் அவர்கள் சேர்ந்துள்ள கல்லுரி ஒருங்கிணைப்பாளர் மூலம் இந்த www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதன் மூலம் தமிழ் நாட்டில் உள்ள 2,11506 மாணவிகள் பயனடைவார்கள்.