திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! பல கோடி மதிப்பில் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!
பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது.
இவ்வாறு இருக்கும் கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.
மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகின்றது.
மேலும் திருப்பதியில் உள்ள காலஹஸ்தி கோவிலுக்கும் பக்கதர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.ஆனால் அங்கு போதிய சாலை வசதி இல்லாததால் பக்தர்கள் மிகவும் அவதி படுகின்றனர்.
அதனால் காலஹஸ்தி கோவிலுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியை மேபதுத்தும் விதமாக அங்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகின்றது.இந்த தேசிய நெடுஞ்சாலையானது சுமார் 2900 கோடி ரூபாயில் வடிவமைகபட்டு வருகின்றது.
இந்த சாலை சுமார் இந்த சாலை சுமார் 35 கிலோ மீட்டருக்கு அமைக்கபடுகின்றது. இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால் காலஹஸ்தி கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.