Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!!

#image_title

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!!

தமிழக அரசு ஆனது போக்குவரத்து துறையில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அவ்வாறு அமல்படுத்துவதினால் விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் முடியும்.

அந்த வகையில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள்,சாலையில் விதிகளை மீறுபவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர்.இவ்வாறு கண்காணிப்பு கேமரா மூலம் சாலையில் விதிகளை மீறி நடப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த புதிய திட்டமானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் நபர்கள் யார் என கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டு கட்டாயம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல் ஆணையர் நேற்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அறிவிப்பு வெளிவந்ததும் மக்களிடைய பல குழப்பங்கள் எழ ஆரம்பித்துவிட்டது. இது குறித்த தற்பொழுது காவல்துறை சார்பாக தக்க விளக்கம் அளித்துள்ளனர்.

அதாவது மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் அதிகமாக செல்பவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து எச்சரிக்கை மட்டுமே கொடுக்க முடியும் என்றும் அபராதம் விதிக்கும் கேமரா தற்பொழுது செயல்பாட்டுக்கு கொண்டு வர வில்லை எனவும் கூறியுள்ளனர்.

இவ்வாறு காவல் துறை சார்பாக விளக்கம் அளித்தவுடன் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஏனென்றால் குறைவான வேகத்தில் சென்றால் கூட இந்த கண்காணிப்பு கேமரா அபராதம் என்ற பெயரில் குறுஞ்செய்தி அனுப்பி விடுமோ என்ற பல்வேறு எண்ணங்கள் மக்கள் மனதில் இருந்தது.

ஆனால் எச்சரிக்கை மட்டும் தான் தற்போது கொடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் கூறியது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version