மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!! உடனடியாக சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் பள்ளிக்கு பேருந்துகளில் வந்துப் படிக்கின்றனர். இதற்காக இவர்களுக்கு செலவு ஏற்படக் கூடாது என்று தமிழக அரசு இலவச பஸ் பாஸ் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக எண்ணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவ, மாணவிகள் இந்த இலவச பயண அட்டையை பள்ளிகளில் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம்.
மேலும் இந்த இலவச பயண அட்டையை கல்வி ஆண்டு முழுவதும் பயன்படுத்தி இலவசமாக பயணிக்கலாம். தமிழகத்தில் கோடை விடுமுறையின் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி நீடித்து அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் ஜூன் 12 ஆம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டு தற்போது 15 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது.
எனவே மாணவ, மாணவிகளுக்கு இந்த இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பஸ் பாஸிற்கு மாணவர்கள் அனைவரும் தங்களது ஆசிரியர்கள் மூலமாக விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு நேரடியாக விண்ணப்பிக்காமல் பள்ளிக்கல்வித்துறை செயலி மற்றும் இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.