மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! பணியாளர்களுக்கு ஊதியமும் உயர வாய்ப்பு???

0
1376
Happy news given to the employees by the Central Government!! Wages for employees are also likely to increase???

மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! பணியாளர்களுக்கு ஊதியமும் உயர வாய்ப்பு?

மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ஊதியக்குழுக்களுக்கு இடையே  10 ஆண்டுகள் இடைவெளி ஆனதால் மத்திய அரசு பணியாளர்களும் ,ஓய்வூதியதாரர்களும் ஆகிய  அனைவரும் நிதி நெருக்கடியால் பண பற்றாக்குறை ஏற்பட்டு சிக்கலில் உள்ளன என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதில் ரூ 26000 பண மதிப்புக்கு பதில் ரூ 18000 மாக ஊதியத்தை குறைக்க போவதாக 7 வது ஊதியக்குழு நிர்ணயித்துள்ளது. அதோடு  பித்மெண்ட் பாக்டர் 3.15 க்கு பதில் 2.57  சதிவதமாக மாற்றி தவறாக தெரிவிக்கப்பட்டது.

முன்பு இருந்த 5 வது மற்றும் 6 வது ஊதியக்குழு மேலும் டிஏ டிஆர் 50 சதவிதம் உயரும் என்று கூறியிருந்தது. மத்திய அரசு 3 ஊதியக்குழுக்களுடன் பரிந்துரை செய்ததில் டிஏடிஆர் மதிப்பு எதிர்காலத்தில் 50 சதவிதம் உயர்ந்தால்  அரசு ஊழியர்களின் ஊதியத்தில்  திருத்தம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் ஜனவரி மாதம் 2024 ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அறிக்கை சமர்ப்பிக்க சுமார் 2 வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.இதனை பரிசீலினை செய்ய ஓராண்டு அல்லது அதற்கு மேல் ஆகும் என்பதால் மத்திய அரசு  8 வது ஊதியக்குழுவை அமைத்து இதற்கு தீர்வு கான வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு மத்திய அரசானது மற்றொரு ஊதியக்குழுவை அமைக்க அவசியம் இல்லை என்றும் 8 வது ஊதியக்குழுவை அமைக்க பரிசீலனை எதுவும் மேற்கொள்ள பட வில்லை என்றும்  மத்திய நிதித்துறை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.இப்பொழுது அரசு ஊழியர்களின் பண  மதிப்பு  42  சதவிதம் அக இருக்கும் நிலையில்  அகவிலைப்படி உயர்ந்தால்  ஊதியம் 46  சதவிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.