Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ?

#image_title

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ?

நடிகை நித்யா மேனன், நானி நடிப்பில் வெளியான “வெப்பம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் ஓகே கண்மணி, காஞ்சனா2, மெர்சல், போன்ற திரைப்படங்களில் பிரம்மாதமாக நடித்து அசத்தியவர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நித்யா மேனன், தன்னை தமிழ் பட நடிகர் ஒருவர் துன்புறுத்தியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். என்னும் செய்தி பரவியது.

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலர் இவருடன் இணைந்து நடித்த தமிழ் பட நடிகர்களின் பட்டியல்களை வேவு பார்க்கத் தொடங்கினர்.

இதனை அறிந்த நித்யா மேனன் “இது முற்றிலும் தவறான வதந்தி இந்த மாதிரியான நேர்காணலை நான் எங்கும் கொடுக்கவில்லை ” என அவர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த செய்தியானது தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version