Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அஸ்வினை அணியை விட்டு நீக்குங்கள்..ஹர்பஜன் சர்ச்சை பேச்சு!! தனிப்பட்ட கோபம் தான் காரணமா??

Harbhajan controversy speech

Harbhajan controversy speech

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடனான 2வது போட்டியில் தோல்வியடைந்த பிறகு பலரும் விமர்சனம் செய்த நிலையில் அஸ்வின் நீக்க வலியுறுத்திய ஹர்பஜன் சிங்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் அடுத்து நடக்க உள்ள இரண்டு மூன்றாவது போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்திய அணி.

இதில் அணியில் பல மாற்றங்கள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தற்போது ரோஹித் மிடில் ஆர்டரில் தொடர்ந்து களமிறங்குவதே நன்று. மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவை நீக்கி பிரசித் கிருஷ்ணாவை விளையாட வைக்கலாம்.

பிரசித் கிருஷ்ணா உயரமான பந்துவீச்சாளர் என்பதால் அவர் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு அழுத்தம் அதிகமாக கொடுக்க முடியும். மேலும் இரண்டாவது போட்டியில் வாஷிங்டன் க்கு பதிலாக அஸ்வின் விளையாடினர் ஆனால் அவர் தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை எனவே அவருக்கு பதிலாக வாஷிங்டன் விளையாடலாம்.

அவர் நன்றாக பந்து வீசுகிறார் மேலும் அஸ்வினை விட பேட்டிங் நன்றாக செய்கிறார். எனவே அஸ்வினை அணியில் இருந்து நீக்க வலியுறுத்தினார். இதனால் ரசிகர்கள் அஸ்வின் மீது தனிப்பட்ட கோபத்தில் தான் இவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என கருத்து தெரிவித்து  வருகின்றனர்.

Exit mobile version