மாதக்கணக்கில் மாதவிடாய் தடைப்பட்டு இருக்கா?? ஒருமுறை இதனை குடித்தால் வந்துவிடும்!!

0
133

மாதக்கணக்கில் மாதவிடாய் தடைப்பட்டு இருக்கா?? ஒருமுறை இதனை குடித்தால் வந்துவிடும்!!

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று மாதவிடாய் சுழற்சி தான். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை.

ஒரு சில பெண்கள் மாதவிடாய் உடனடியாக வருவதற்கு மாத்திரைகளை உட்கொள்கின்றனர், அது அந்த அளவிற்கு நல்லதல்ல எனவே முடிந்தவரை இயற்கையான முறையில் மாதவிடாய் வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.

எனவே இது போன்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கையான வைத்தியம். நாம் இரண்டு வகையான தீர்வுகளை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எள்ளு

வெல்லம்

செய்முறை:

1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 50 கிராம் எள்ளு சேர்த்து மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும். பின்பு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு அதனை உருண்டையாக எடுத்து வைத்து தினமும் இரண்டு உருண்டை சாப்பிட்டு வந்தால் போதும்.

இந்த எள்ளுருண்டையை நாம் எடுத்து வந்தால் மாதவிடாய் பிரச்சனை நேரத்தில் வரும் உடல் சோர்வு, இடுப்பு வலி கை கால் வலி போன்ற பிரச்சனைகள் வராது.

இப்பொழுது ஒரே நாளில் மாதவிடாய் வருவதற்கு ரெமிடியை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி

தண்ணீர்

செய்முறை:

1: முதலில் ஒரு துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கிய பின்பு அதனை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

2: பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து அதில் நாம் எடுத்து வைத்த இஞ்சியை சேர்த்து நன்றாக அந்த தண்ணீரின் நிறம் மாறும் வரை கொதிக்க விடவும்.

அதாவது 200 மில்லி தண்ணீர் 100 மில்லியாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.

இதனை நாம் வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும் பின்பு இரவில் தூங்கும் முன்பு குடித்துவிட்டு தூங்கினால் காலையில் உடனடியாக மென்சஸ் ஆகிவிடும்.

அதேபோல் மென்சஸ் தேதிக்கு இரண்டு நாள் முன்பாக பப்பாளி அல்லது அண்ணாச்சி பழம் ஜூஸ் அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடனடியாக மென்சஸ் ஆகிவிடலாம்.