Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“எலுமிச்சம் பழம் + பச்சை மிளகாய்” இருந்தால் தீராத கண் திருஷ்டியும் ஒழிந்து போகும்!!

#image_title

“எலுமிச்சம் பழம் + பச்சை மிளகாய்” இருந்தால் தீராத கண் திருஷ்டியும் ஒழிந்து போகும்!!

கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது என்பார்கள். காரணம் கண் திருஷ்டி ஒருவர் மீது பட்டால் அவரின் வாழ்க்கை வீழ்ச்சியை நோக்கி செல்லும். எந்த ஒரு சுப நிகழ்வுகளும் நடைபெறாது. உடல் சோர்வு, கை, கால் வலி அதிகளவு ஏற்படும். பணக் கஷ்டம், மனக் கஷ்டம் ஏற்படும்.

அடுத்தவரின் வளர்ச்சி பிடிக்காமல் கெட்ட எண்ணங்கள் கொண்டிருக்கும் நபர்களால் கண் திருஷ்டி ஏற்படுகிறது. சிலர் கண் திருஷ்டி படாமல் இருக்க வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயகர் படத்தை மாட்டி வைப்பர். சிலர் நிலைவாசலுக்கு முன்னர் கண்ணாடி மாட்டி வைத்திருப்பர்.

ஒரு சிலர் செவ்வாய் கிழமை அன்று ஒரு எலுமிச்சம் பழம் மற்றும் 5 பச்சை மிளகாய் என்று கயிற்றில் கோர்த்து வீட்டு நிலைவாசலில் கட்டுவர். இதனால் கண் திருஷ்டி முழுமையாக ஒழிந்து விடும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு சிலர் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதனுள் குங்குமம் தடவி வீட்டு நிலைவாசலின் இருபுறமும் வைப்பார்கள். இவ்வாறு செய்வதாலும் கண் திருஷ்டியில் இருந்து தப்ப முடியும்.

Exit mobile version