இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.
இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் கூறபட்டு வருகிறது. அதில் மறுக்க முடியாத உண்மை இந்திய அணியின் பேட்டிங். இந்திய வீரர்கள் யாரும் தொடர்ச்சியான பேட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தனர். இந்நிலையில் கில் குறித்து சீக்கா பேசுகையில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில் அவர் சுப்மன் கில்லை அனைவரும் அதிகம் மதிப்பிடுகிறீர்கள். அவர் உண்மையில் ஓவர் ரேட்டட் ப்ளேயர். இவருக்கு இவ்வளவு வாய்ப்பு வழங்குவதை பார்க்கும்போது சூர்யகுமார் யாதவ் க்கு கூட வாய்ப்புகள் வழங்கலாம். மேலும் கெய்க்வாட் மற்றும் சுதர்ஷன் முதல் தர டெஸ்டில் நன்றாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் சொந்த மண்ணில் யார் வேண்டுமானாலும் ரன் குவிக்கலாம் ஆனால் வெளிநாடுகளில் ரன் குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.