இந்திய ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 1 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டியில் வென்று முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டியில் சமன் செய்துள்ளது. இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது.
இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் என களமிறங்கியது. ஆனால் முதல் போட்டியில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் இந்திய அணி இலங்கை ஆஸ்திரேலியா அணியை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிகெட் சிறந்த வீரர்களின் டெஸ்ட் பிளேயிங் லேவனை வெளியிட்டது. அந்த அணியில் ஜெயஷ்வால்,டக்கெட், ஜோ ரூட், ரச்சின் ரவீந்திரா, ஹாரி ப்ரூக், கமிந்து மென்டிஸ், அலக்ஸ் கேரி, மேட் ஹென்றி, ஹேசில்வுட், கேஷவ் மகராஜ் ஆகியோர் அந்த அணியின் ப்ளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக பும்ரா இடம்பெற்றுள்ளார். இந்த அணியில் கம்மின்ஸ் இடம்பெறவில்லை.