எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்.. – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!

0
109
#image_title

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்… – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக போட்டிகள் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரிதும் கோபத்தில் உள்ளனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா-பாகிஸ்தான் இலங்கையில் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் சுற்றில்  மோதியது. ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால், இப்போட்டி ரத்தாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்தது.இப்போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் அறிவித்து இருந்தாலும், ரிசர்வ் நாளான இன்றும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் பெரிதும் கொந்தளித்துள்ளனர்.

மேலும், செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் கனமழை பொழியும் என்று தெரிந்தும் ஏன் ஆசிய கிரிக்கெட் தொடரை இலங்கையில் ஏன் நடத்தினார்கள்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷாதான் என்று ரசிகர்களும், நெட்டிசன்களும் விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஜெய் ஷாதான் இலங்கையில் போட்டி நடத்த திட்டார் என்றும்  ரிசர்வ் நாளான இன்றும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால், அது பெரும் விமர்சனத்திற்குள்ளாகும் என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.