மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!!
நாடு முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில், இமாசலப் பிரதேசத்தில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய கனமழை இன்று வரை பெய்துக் கொண்டே இருக்கிறது.
இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 2,100 கோடி ரூபாய் இழப்பை எற்படுத்தி உள்ளது. இதில், ஜல் சக்தி துறைக்கு ரூபாய் ஆயிரம் கோடி இழப்பும் மற்றும் பொதுப்பணித்துறைக்கு ரூபாய் 890 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ளது. அதாவது 1,110 சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதில், மண்டி மாநிலத்தில் 355 சாலைகள், ஹமிர்பூரில் 23 சாலைகள், காங்க்ரா-வில் 39 சாலைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்த சாலைகளை சரி செய்து வந்தாலும் கனமழை தொடர்ந்து பெய்வதால் திரும்பவும் சாலைகள் துண்டிக்கப்படுகிறது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் பைப்புகள் உடைந்து விட்டதால் மலை பகுதிகளில் குடிநீரை கொண்டு சேர்ப்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. சாலைகளில் உள்ள சாக்கடைகள் சேதமடைந்து உள்ளது.
இதனால் கழிவு நீரானது சாலைகளிலும், ஆறுகளிலும் நேரடியாக கலக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி இந்த கனமழையின் காரணமாக 636 வீடுகள் முழுவதுமாக இடிந்து, மொத்தமாக 1,764 வீடுகள் சேதமடைந்துள்ளது.
மழையால் ஏறப்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பல்வேறு சேதங்கள் அடைந்திருக்கும் இந்த இமாசலப் பிரதேசம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு கூறி உள்ளார்.