“இடி மின்னலுடன் கனமழை” தமிழ்நாட்டிற்கு உண்டு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தினமும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏராளமான இயற்கை சேதங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதயில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
நாடு முழுதும் மழை பெய்தாலும் தமிழகத்தில் சொல்லும்படியான அளவு மழை பெய்யவில்லை. ஆங்காங்கே மிதமான மழை மட்டுமே பெய்து வருகிறது.
அந்த வகையில், தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் மழை பெய்வது குறித்து தகவலை வழங்கி உள்ளது. அதாவது, தென்மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபடுகிறது.
இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலங்களில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை மற்றும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் இருக்கக்கூடும்.
மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மூடியபடி காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டடிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்றானது வீசக்கூடும்.
ஆந்திரா மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்றானது வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதேபோல், தென்மேற்கு வகக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், அந்தமான பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளில் காற்று வேகமாக வீசக்கூடும் எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.