Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூல நோய் வெறும் 7 நாட்களில் அடியோடு தீரணுமா!! இத ட்ரை பண்ணா அது நிர்மூலம்!!

மூல நோய் வெறும் 7 நாட்களில் அடியோடு தீரணுமா!! இத ட்ரை பண்ணா அது நிர்மூலம்!!

7 நாளில் மூலம் நிரந்தரமாக சரியாக இயற்கை வைத்தியம்.மூல நோய். கடுமையான மலச்சிக்கல், குத கால்வாய், மலக்குடல் நரம்புகள் வீக்கம், வலி. இதனோடு இரத்தபோக்கு என பல உபாதைகளை உண்டாக்கும்.
இதனால் மலம் வெளியேறும் போது இரத்தமும் வெளியேறுவதால் நீண்ட நாள் இது தொடரும் போது இரத்த சோகை கடுமையாக இருக்கும்.

நோய் காரணம்:

மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மூல நோயின் வகைகள்:

இந்த மூல நோயில் பல வகைகள் உள்ளன. அவை ஏற்பட்டுள்ள இடம், தீவிரத்தன்மை, மோசமாகும் தன்மை கொண்டு வேறுபடும். அதில் பெரும்பாலும் இரண்டு வகைகளால் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும்.

தேவையான பொருட்கள்:

துத்தி இலை/துத்திக் கீரை

பால்

பனங்கற்கண்டு/ நாட்டு சக்கரை

செய்முறை:

1: முதலில் 10 துத்தி இலையை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.
2: பின்பு அந்த இலையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
3: பிறகு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
4: வடிகட்டி வைத்த அந்த துத்தி இலையின் சாரில் அரை டம்ளர் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
5: அது நாட்டு சக்கரை சேர்த்து குடித்து வந்தால் போதும்.
6: வடிகட்டி வைத்து அந்த துத்திக் கீரை சக்கையை மூலம் உள்ள புண்களில் ஒரு துணியில் கட்டி வைத்தால் சரியாகிவிடும்.
இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரே வாரத்தில் நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும்.
மூலமால் ஏற்படக்கூடிய புண்கள் பாதிப்புகள் அனைத்தும் சரியாகிவிடும்.
இந்த துத்திக் கீரை கிடைக்கவில்லை என்றால் கடைகளில் பொடியாக இருக்கிறது அதனை வெந்நீரில் சேர்த்து தினமும் பருகி வந்தால் போதும்.
சில பேருக்கு மூலம் அந்த தசை தள்ளி இருக்கும் அதனால் 15 முதல் 20 நாட்கள் வரை இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல ஒரு பலன் கிடைக்கும்.
துத்திக் கீரையில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது எனவே இதனை பயன்படுத்தி வந்தால் மூலம் போன்ற நோய்கள் தீர்ந்துவிடும்.

Exit mobile version