ஏய்… யார்ரா அவன்? தன் சுழற்பந்தில் கோலி, கில், ரோஹித்தை வீழ்த்தி அசர வைத்த 20 வயது இலங்கை வீரர்!

0
141
#image_title

ஏய்… யார்ரா அவன்? தன் சுழற்பந்தில் கோலி, கில், ரோஹித்தை வீழ்த்தி அசர வைத்த 20 வயது இலங்கை வீரர்!

2 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இலங்கை அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் டுனித் வெல்லாலகே.

தற்போது ஆசிய கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் 80 ரன்கள் எடுத்தபோது, கில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி களத்தில் இறங்கினார். விராட் கோலி 3 ரன்கள் எடுத்த நிலையில், டுனித் வெல்லாலகே சுழற் பந்து வீழ்ச்சியில் ரன் அவுட்டானார். இதன் பின்பு டுனித் வெல்லாலகே பந்தில் அரைசதம் அடித்த நிலையில் ரோகித் இரையானார். பின்பு களத்தில் தாக்கு பிடித்து கிஷன் – ராகுல் ஜோடி ஆடினார்கள். அவர்களுக்கு டுனித் வெல்லாலகே பந்து வீச்சில் பயங்கரமாக குடைச்சல் கொடுத்தார். அவரது பந்தில் ராகுல் அவுட்டானார். இதன் பின், பாண்டியாவும் ரன் அவுட்டானார்.

டுனித் வெல்லாலகேவின் அபார பந்து வீச்சைப் பார்த்து இந்திய அணி நட்சத்திர வீரர்கள் அசந்து போனார்கள். அவர்கள் மட்டுமல்ல, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் 20 வயதாகும் டுனித் வெல்லாலகேவின் சுழற் பந்து வீச்சைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

யார் இந்த டுனித் வெல்லாலகே… வாங்க பார்ப்போம் –

இலங்கை, கொழும்பு நகரைச் சேர்ந்தவர் டுனித் வெல்லாலகே. இவர் 2003ம் ஆண்டு பிறந்தார். 2022ம் ஆண்டு தன்னுடைய 19 வயதில் சர்வதேச கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்து ஆடத் துவங்கினார்.

இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும், 12 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி உள்ளார். இந்தியாவுக்கு எதிரான இப்போட்டியில் இதுவரை 16 விக்கெட்கள் வீழ்த்தி இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.