Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர்… இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!

 

4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர்… இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி…

 

4 நாடுகள் மட்டும் பங்கேற்று விளையாடி வரும் ஹாக்கி தொடரில் இந்திய ஜூனியர் ஹாக்கி ஆடவர் அணி இங்கிலாந்து ஹாக்கி ஆடவர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

 

நான்கு நாடுகள் மட்டும் பங்கேற்று விளையாடும் ஹாக்கி தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா, ஸ்பெயின் ஆகிய நான்கு நாடுகளை சேர்ந்த ஹாக்கி ஆடவர் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது.

 

இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய ஜூனியர் ஹாக்கி ஆடவர் அணி ஸ்பெயின் ஹாக்கி அணியை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி ஜெர்மனி ஹாக்கி அணியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

 

இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட்21) இந்தியா ஹாக்கி அணி தனது 3வது ஆட்டத்தில் இங்கிலாந்து ஹாக்கி அணியை எதிர் கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி இந்திய ஹாக்கி அணி விளையாடி வந்தது. இந்திய ஹாக்கி அணிக்காக ரஜிந்தர் சிங் ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

 

இதைத் தொடர்ந்து அமீர் அலி 33வது நிமிடத்திலும், அமன்தீப் லக்ரா 41வது நிமிடத்திலும், ஆரைஜீத் சிங் ஹண்டல் 58வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். இதனால் ஆட்டத்தின்.இறுதியில் இந்திய ஹாக்கி ஆடவர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

 

பின்னர் ஆட்டம் முடிவில் இந்தியா ஜூனியர் ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

 

Exit mobile version