பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 21 ஆம் தேதி விடுமுறை!! அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!
கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது.
அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது.
தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது.
மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற நிலையில் வரும் காலங்களில் இந்த பருவமழை தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இன்னும் பல மாவட்டங்களில் பருவமழை பெய்ந்து கொண்டு வருவதால் பள்ளிகளுக்கு லீவு விடப்பட்டு வருகின்றது.அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 21 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை அந்த மாவட்டத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலின் அம்மன் திருவிழாவை ஒட்டி விடப்படுவதாக அவர் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது.