Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாயகம் திரும்பும் பெண் ஸ்டோக்ஸ்! ஏமாற்றத்தில் சென்னை அணி ரசிகர்கள்!

#image_title

தாயகம் திரும்பும் பெண் ஸ்டோக்ஸ்! ஏமாற்றத்தில் சென்னை அணி ரசிகர்கள்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் அவர்கள் கடைசி லீக் சுற்று முடிந்த பிறகு தாயகம் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அதிக விலைக்கு இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டார். அதிக விலைக்கு வாங்கப்பட்ட இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு காயம் காரணமாக இதுவரை எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. அணி நிர்வாகமும் அவரை விளையாட வைக்கவில்லை. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி லீக் சுற்று முடிந்த பிறகு பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்துக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வெளியான தகவலின்படி பிளே ஆப் சுற்றுகளின் போது பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்க மாட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகள் விளையாடி 7 போட்டிகளித் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வரும் மே 20ம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Exit mobile version