இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வென்றுள்ளது.
மூன்றாவது போட்டியானது சமனில் முடிவடைந்தது. இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபடுட்டுள்ளது. எனவே இரு அணி ரசிகர்களும் 4 வது போட்டியை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த 4 வது போட்டியானது நாளை தொடங்கவுள்ளது. இந்த போட்டி பாக்சிங் டே போட்டியாக நடைபெற உள்ளது.
தற்போது தொடக்க வீரராக களமிறங்கும் கே எல் ராகுல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மூன்றாவது போட்டியில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் கே எல் ராகுல் தனி ஆளாக போராடி ஜடேஜாவுடன் அணிக்கு முக்கிய நேரத்தில் ரன் சேர்த்தார். இதற்கு முன் நடைபெற்ற இரு பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து இரு சதங்களை பதிவு செய்துள்ளார் எனவே அவர் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என இந்திய அணி நம்பிக்கை வைத்துள்ளது.