Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!!

Houses damaged by flood!! 5 lakh people affected!!

Houses damaged by flood!! 5 lakh people affected!!

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!!

நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க மழைப் பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது.

இவ்வாறு பெய்த இந்த கனமழையில் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்மூர் என்ற மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒருவர் பலியாகியுள்ளார்.

இதைப்போலவே, பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், நல்பாரி, சோனிட்பூர், நாகோன், மஜூலி, லகிம்பூர், கோக்ராஜ்ஹார், கம்ரூப், கோலகத், ஹோஜாய், திப்ருகர், துப்ரி, தாமாஜி, டாராங், சிராங், போங்கைகான் ஆகிய மாவட்டங்களும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் பஜாலி மற்றும் தாராங்கில் மாவட்டம் பெரும்பாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களின் கீழ் 58 வருவாய் வட்டங்கள் மற்றும் 1,350 கிராமங்கள் உள்ளன.

இதில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 14,035  பேர் 162 நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். இதை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு, மருத்துவம் மற்றும் சில அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளத்தில் 4,091  ஹெக்டர் நிலங்கள் மூழ்கியது. இதைத்தவிர்த்து பல்வேறு பாலங்கள், பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்கள் இந்த வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

அந்த வகையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக பிரம்மபுத்திரா, மனாஸ் மற்றும் புத்மாரி நதிகளில் அபாய அளவை விட நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

Exit mobile version