Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

PF தொகையை மொபைல் போனில் எப்படி பார்ப்பது? இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

PF தொகையை மொபைல் போனில் எப்படி பார்ப்பது? இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளத்தில் pf என்று ஒரு தொகை பிடிக்கப்பட்டு இருக்கும். இந்த pf தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆன்லைனில் பார்ப்பார்கள். அப்படி பார்க்கும்போது திடீரென்று சர்வர் பிரச்சனை ஏதாவது ஏற்படும் அல்லது சிலருக்கு இதை பார்க்கவே தெரியாது. இது போன்ற சமயங்களில் மொபைல் போனை வைத்து எவ்வாறு பிஎப் பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்வது என்பதை இங்கு பார்ப்போம்.

1. நம்முடைய மொபைல் போனிலிருந்து 996604425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். பிறகு நம்முடைய மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக pf பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பது வந்துவிடும்.

2. இரண்டாவது முறை எஸ் எம் எஸ் மூலமாக எவ்வாறு பிஎப் பேலன்ஸை பார்ப்பது என்பதை தெரிந்து கொள்வோம். இதற்கு நம்முடைய ரெஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரில் இருந்து ETHOFO என்று டைப் செய்து சிறிதளவு ஸ்பேஸ் விட்டு உங்களுடைய யு ஏ என் எண்ணை டைப் செய்து விட்டு மறுபடியும் ஸ்பேஸ் விட்டு உங்களுக்கு என்ன மொழி தேவைப்படுகிறது அதை செலக்ட் செய்து விட்டு, எந்த மொழி வேண்டுமோ அதற்கு என்று ஒரு கோட் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு தமிழ் மொழி வேண்டும் என்றால் TAM என்று டைப் செய்து 77382 99899 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பும் போது நம்முடைய பிஎஃப் பாலன்ஸ் குறித்த அனைத்து தகவல்களும் நமக்கு எஸ்எம்எஸ் மூலமாக வந்துவிடும்.

எனவே இந்த பிஎஃப் தொகையை பார்ப்பதற்காக எந்த ஒரு ஆன்லைன் செயலியோ அல்லது இணையதளத்திலும் நாம் பயன்படுத்தும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இதுபோன்று நம்முடைய மொபைல் எண்ணில் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவோ அல்லது குறிப்பிடுப்பட்ட எண்ணிற்கு மிஸ்டு கால் தருவதன் மூலமாகவோ நம்முடைய pf பேலன்ஸை நாம் உடனடியாக நம்முடைய மொபைல் போனில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிந்து கொள்வதால் இதில் எந்த வித பிரச்சனையும் ஏற்படாது.

Exit mobile version